thamimun ansari

Advertisment

ஜாபுயல்தாக்கும்என்றஎச்சரிக்கைவந்தவுடன்தனதுதொகுதிமக்களுக்குநவம்பர் 15ஆம்தேதிவாட்ஸ்அப்மூலம்உதவிஎண்களையும், எம்எல்ஏஅலுவலகம்திறந்தேஇருக்கிறது, முகாம்களில்தங்கஏற்பாடுகள்செய்துள்ளோம்என்றும், இந்தபுயலின்தாக்கத்தில்இருந்துமக்களைகாக்கஅனைவரும்இறைவனிடம்பிராத்திப்போம்என்றுஆடியோவெளியிட்டுபரப்பினார்நாகைஎம்எல்ஏவும், மனிதநேயஜனநாயககட்சியின்பொதுச்செயலாளருமானதமிமுன்அன்சாரி.

தொடர்ந்துபாதிக்கப்பட்டபகுதிகளில்மனிதநேயஜனநாயககட்சியின்தொண்டர்களின்உதவியோடுமீட்புப்பணிகளையும், நிவாரணப்பணிகளையும்மேற்கொண்டுவருகிறார். மக்களின்நிலைமைஎப்படிஇருக்கிறது, ஆளும்அரசின்செயல்பாடுதிருப்பிஅளிக்கிறதா? உள்ளிட்டகேள்விகளைஅவரிடம்முன்வைத்தோம்.

Advertisment

THAMIMUN ANSARI - gaja - nagai

ஒருஇளம்பெண்விதவையானால்எப்படிகொடுமையாகஇருக்கும், அதேபோல்இருக்கிறதுஎங்கள்பகுதிகள். யாருக்குயார்ஆறுதல்சொல்வதென்றுதெரியவில்லை. எல்லோரும்கண்ணீர்விடுகிறார்கள். மரத்தைபார்க்கபார்க்கஅழுகைவருகிறது. ஒருவரையொருவர் பார்க்கும்போது அழுகை வருகிறது.எங்கள்பகுதிமக்கள்மரங்களின்பிரியர்கள். பசுமைவிரும்பிகள். இனிஇந்தமரங்களைவைத்துகிளப்புவதற்கு 15 வருடங்கள்ஆகும். வார்த்தைகளால்வர்ணிக்கமுடியாதபேரிழப்பு. மிகப்பெரியவேதனையில்மூழ்கியிருக்கிறோம்.

கஜாபுயல் 6 மாவட்டங்களைசீரழித்திருக்கிறது. இதனையாருமேஎதிர்பார்க்கவில்லை. 6 மாவட்டங்களைஒரேநேரத்தில்தாக்கும்என்பதுபுதியதாகஇருக்கிறது.

THAMIMUN ANSARI - gaja - nagai

இந்தவிஷயத்தில்தமிழகஅரசுஒருவாரமாகமுன்னேற்பாடுகளைசெய்தகாரணத்தினால்ஆபத்தானபகுதிகளில்இருந்துமக்கள்மீட்கப்பட்டுமுகாம்களில்தங்கவைக்கப்பட்டனர். உயிர்ச்சேதம்குறைந்திருக்கிறது. மக்கள்ஆயிரக்கணக்கில்காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்என்பதைமறுக்கமுடியாது.

இதனைநான்மட்டும்அல்ல, எதிர்க்கட்சித்தலைவர்ஸ்டாலின், பாமகநிறுவனர்ராமதாஸ், மதிமுகபொதுச்செயலாளர்வைகோஉள்ளிட்டபலர்மனம்திறந்துபாராட்டியிருக்கிறார்கள்.

thamimun ansari

புயலுக்குமுன்புஎடுத்தஅந்ததீவிரமானமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைப்போல, புயல்பாதிக்கப்பட்டஅடுத்தநாள்முன்னேற்பாடுகளைசெய்வதில்சின்னதயக்கமும், சுனக்கமும்இந்தஅரசுக்குஏற்பட்டிருந்ததுஉண்மைதான்.

ஞாயிற்றுக்கிழமைஇரவில்இருந்துநிவாரணப்பணிகள்முயற்சிகள்நடைப்பெற்றன. ஆனால்இந்தமுயற்சிகள்சனிக்கிழமையேபோர்க்காலஅடிப்படையில்தொடங்கியிருக்கவேண்டும். அப்படிசெய்திருந்தால்மக்கள்இந்தஅளவுக்குகொந்தளித்திருக்கமாட்டார்கள்.

THAMIMUN ANSARI - gaja - nagai

நாகைமாவட்டம், நாகூர்பட்டினச்சேரியில்தொடங்கிபுதுக்கோட்டைமாவட்டம்கோட்டைப்பட்டிணம்வரைபெரியஅளவுக்குசேதம்ஏற்பட்டுள்ளது. கடலோரமீனவர்களுக்குபடகுகள்சேதம். விவசாயிகளுக்குதென்னை, பனை, மா, வாழை, பனப்பயிற்கள்அனைத்தும்மிகப்பெரியசேதத்தைசந்தித்துள்ளது. குடிசைவீடுகள், ஓட்டுவீடுகள்சேதமாகியுள்ளன. வரலாறுகாணாதஇழப்புஏற்பட்டுள்ளது.

கடுமையானபுயல்என்பதால்சாலைகளில்மரங்கள்சாய்ந்துகிடக்கிறது. ஒருலட்சத்திற்கும்மேலானமின்கம்பங்கள்விழுந்துகிடக்கிறது. அதனைஅப்புறப்படுத்துவதில்பலஇடங்களில்பிரச்சனைஇருக்கிறது.

THAMIMUN ANSARI - gaja - nagai

அரசுஉணவுவிநியோகத்தையும், குடிநீர்விநியோகத்தையும்ஹெலிகாப்டர்களைபயன்படுத்தி, ராணுவவிமானங்களைபயன்படுத்திஇந்தமக்களின்பசியையும், பட்டிணியையும்போக்கியிருக்கமுடியும்.

அல்லதுதேசியபேரிடர்என்றுமத்தியஅரசுக்குஅழுத்தத்தைகொடுத்து, நெருக்கடியைகொடுத்துராணுவத்தைவரவழைத்துபோர்க்காலஅடிப்படையில்சிலபணிகளைதொடங்கியிருக்கமுடியும். ஆனால்இவர்கள்ஏன்செய்யவில்லைஎன்றுதெரியவில்லை.

THAMIMUN ANSARI - gaja - nagai

ஆயினும்திங்கள்கிழமையில்இருந்துமுழுவீச்சில்என்னுடையநாகைதொகுதியில்பணிகள்நடந்துகொண்டிருக்கிறது. என்னுடையதொகுதிக்குஅமைச்சர்எஸ்.பி.வேலுமணி, வேதாரண்யம்தொகுதிக்குஅமைச்சர்திண்டுக்கல்சீனிவாசன், அதேபோல்அமைச்சர்அன்பழகன், கீழ்வேளூர்தொகுதிக்குஅமைச்சர்பெஞ்சமின்போன்றவர்களைஅரசுஅனுப்பிதிங்கள்கிழமையில்இருந்துபணிகள்நடக்கிறது.

இந்தப்பணிகள்சனிக்கிழமையேதொடங்கியிருந்தால்மக்கள்இந்தஅளவுக்குகொந்தளித்திருக்கமாட்டார்கள். மக்களின்கோபம்நியாயமானது. மக்களுக்குபசிக்கிறது. பிள்ளைகள், குழந்தைகள்அழுகிறது, மக்கள்என்னசெய்வார்கள். போராடத்தான்செய்வார்கள். ரோட்டில்உட்காருவதைவிடவேறுவழிஅவர்களுக்குதெரியாது.

ஹெலிகாப்டர்கள்மூலம்உணவுபொட்டலங்கள், தண்ணீர்பாக்கெட்டுக்கள்வழங்கியிருந்தால்மக்கள்ஓரளவுஅமைதிகாத்திருப்பார்கள். அதனைசெய்யாமல்விட்டுவிட்டார்கள்என்பதுதான்எனக்குமிகப்பெரியவருத்தமாகஇருக்கிறது.

thamimun ansari - gaja - nagai

சாலைமறியல்நடந்ததால்பலஇடங்களுக்குநிவாரணப்பொருட்கள்போய்சேருவதில்பிரச்சனைஏற்பட்டது. பலஇடங்களில்மக்கள்கோபப்பட்டுமறியல்செய்ததால், தொண்டுநிறுவனங்கள்சிலபகுதிகளுக்குசெல்லமுடியாதநிலைஏற்பட்டது.

நாகைதொகுதியில்பாதிக்கப்பட்டஅனைத்துஇடங்களுக்கும்போனீர்களா?

ஏறத்தாழ 80 சதவீதஇடங்களுக்குநான்சென்றுள்ளேன். மீதமுள்ளபகுதிகளுக்குஅதிகாரிகளைதொடர்புகொண்டுஅந்தபகுதிகளில்உள்ளமக்களுக்குதேவையானவற்றைசெய்யச்சொல்லியிருக்கிறேன்.

மக்களைசந்திப்பதில்சிரமம்இருக்கிறதா?

எந்தசிரமமும்இல்லை. நான்போகும்இடங்களில்மக்கள்தங்களதுஆதங்கத்தைதெரிவிக்கிறார்கள். எங்கள்மனிதநேயஜனநாயககட்சியின்சார்பில்வழங்கக்கூடியநிவாரணப்பொருட்களைபெற்றுக்கொள்கிறார்கள்.

thamimun ansari - gaja - nagai

மக்கள்கதறுகிறார்கள். அழுகிறார்கள். பசியில்பட்டிணியில்துடித்துக்கொண்டிருக்கிறார்கள். கரெண்ட்இல்லை, மரங்கள்விழுந்துகிடக்கிறது, குப்பைகள்அகற்றப்படாமல்இருக்கிறதுஎன்கிறார்கள். அதற்கானஏற்பாடுகளைசெய்கிறேன்என்றுசொல்லும்போதுஅமைதிஅடைகிறார்கள்.

மற்றவர்களுக்குஎப்படியோஎனக்குதெரியாது. எனக்கும், எனதுதொகுதிமக்களுக்குமானஉறவுசுமூகமாகஉள்ளது. நம்பிக்கைக்குரியதாகவும்இருக்கிறது.

புயல்பாதித்துஐந்துநாட்கள்கழித்துதான்புதுக்கோட்டை, தஞ்சைமாவட்டங்களுக்குமுதல்அமைச்சர்ஹெலிகாப்டரில்வந்தார். வானிலையைகாரணம்காட்டிநாகை, திருவாரூக்குஅவர்வரவில்லை. முதல்அமைச்சராகஇந்தபங்களிப்புபோதுமா?

thamimun ansari - gaja - nagai

உண்மையில்சொல்லப்போனால்அதில்எனக்குவருத்தம்இருக்கிறது. வானிலைசரியில்லைஎன்றுசொன்னால்அவர்சென்னையில்இருந்தேதரைவழியிலேயேவந்திருக்கவேண்டும். திருச்சியில்இருந்தாவதுதரைவழியில்வந்திருக்கவேண்டும்.

அப்படிவந்திருந்தால்மக்கள்சற்றுஆறுதல்அடைந்திருப்பார்கள். மகிழ்ச்சிஅடைந்திருப்பார்கள். மக்கள்முதல்அமைச்சரிடம்இருந்துசிலஅறிவிப்புகளைஎதிர்பார்த்திருந்தார்கள். அவர்வராமல்போனதுஎன்னைப்போன்றவர்களுக்கும், மக்களுக்கும்மிகப்பெரியவருத்தம்தான்.

thamimun ansari

உங்க கட்சி சார்பாக முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?

மனிதநேயஜனநாயககட்சியின்சார்பில்நாகப்பட்டிணம், வேதாரண்யம், திருப்பூண்டி, பாமணி, அதிராம்பட்டிணம், பேராவூரணிஆகியஇடங்களில்நிவாரணமுகாம்கள்நடத்திக்கொண்டிருக்கிறோம்.

தினமும்ஆயிரக்கணக்கானமக்களுக்குஉணவுகொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல்குடிநீர்பாக்கெட்டுக்கள், பிஸ்கட்பாக்கெட்டுக்கள், மெழுகுவர்த்திகள், கொசுவர்த்திகள், நாப்கின்போன்றவற்றைகொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

thamimun ansari

இதனைபார்த்துவிட்டுநிறையமக்கள்எங்களுக்குபோன்செய்துவாழ்த்துசொல்கிறார்கள். நிறையமக்கள்உதவிப்பொருட்களைஅனுப்பிவைக்கிறார்கள். அவற்றையெல்லாம்எங்களதுநிவாரணமுகாம்களுக்குபிரித்துஅனுப்புகிறோம்.

பலபகுதிகளில்இருந்துமக்கள்எங்களைதொடர்புகொண்டு, ''எங்கள்பகுதிக்குவாங்க, எங்கள்பாதிப்புகுறித்தும், எங்களதுகுறைகளைகுறித்தும்அரசுக்குஎடுத்துசொல்லுங்கள்'' என்கிறார்கள்.

thamimun ansari

நாகைபகுதியில்ஏராளமானமக்கள்தவிக்கிறார்கள். இவர்களைவிட்டுவிட்டுஅங்குபோகக்கூடியசூழலும், மனமும்இல்லை. நேரமும்இல்லை. அப்படியிருந்தும், ஒருநாள்ஒதுக்கி, எனதுதொகுதிக்குஅப்பாற்ப்பட்டஇடங்களுக்குசுற்றுப்பயணம்செய்துமக்களைசந்தித்து, அதுகுறித்தஅறிக்கையைஅரசுக்குஅனுப்பியுள்ளேன்.

அந்தமக்கள்மிகவும்எதிர்பார்த்துகாத்துக்கிடக்கிறார்கள். எனதுதொகுதிமக்களைகவனிக்கவேண்டியிருப்பதால்அங்குசெல்லமுடியவில்லை. ஆனால்எனதுகட்சியினர்அங்குசென்றுமுடிந்தஉதவிகளைசெய்துகொண்டிருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரையில்இதனைஒருதேசியபேரிடராகஅறிவித்து, ராணுவத்தைகொண்டுவந்துஇறக்கவேண்டும். அப்படிசெய்தால்சுலபமாகமக்களின்குறைகளைதீர்க்கவழிஏற்பட்டிருக்கும். அப்படிஏன்செய்யவில்லைஎன்றுவருத்தமாகஇருக்கிறது. இப்போதாவதுமத்தியஅரசுஅறிவிக்கவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறேன்.

இதுவரைமத்தியஅரசுதனதுபங்களிப்புஎன்னஎன்பதைஅறிவிக்காததுகண்டிக்கத்தக்கது. கவர்னரும்வந்துபார்வையிட்டார். அவர்பார்வையிட்டபிறகும்கஜாபுயல்குறித்துஏன்மத்தியஅரசுஎதையும்அறிவிக்கவில்லை?. அதுதான்எனதுகேள்வி.

தென்னைமுற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலஅரசோதென்னைக்கு 600 ரூபாய்இழப்பீடுஎன்றும், அதனைஅப்புறப்படுத்துவதற்குரூபாய் 500 என்றும்அறிவித்துள்ளது. இதுபோன்றுமற்றஇழப்பீடுகளும்நிவாரணத்தொகைகளைஅறிவித்துள்ளது. இதுபற்றி...

thamimun ansari

தென்னைஉள்படவிவசாயபயிற்களுக்குமாநிலஅரசுஅறிவித்திருக்கக்கூடியநிவாரணத்தொகைகளில்எனக்குஉடன்பாடுஇல்லை. இதுபோதாது. எந்தவிதத்திலும்ஏற்றுக்கொள்ளமுடியாதுஎன்பதுதான்எங்கள்கட்சியின்நிலைப்பாடு.

நிவாரணத்தொகையைஅறிவித்ததில்மக்களுக்குஉடன்பாடுஇல்லை, அதிகரித்துகொடுங்கள், மக்கள்மிகவும்கொந்தளித்துப்போய்இருக்கிறார்கள், இதனைமுதல்அமைச்சர்கவனத்திற்குஎடுத்துச்செல்லுங்கள்என்றுஅமைச்சர்கள்வேலுமணி, தங்கமணிஆகியோரிடம்வலியுறுத்தியுள்ளேன்.