ADVERTISEMENT

'அரசு நிகழ்ச்சிகளில் இனி நாட்டுப்புறக்கலைகள் கட்டாயம்'- தமிழ்நாடு அரசு உத்தரவு

11:32 PM Dec 14, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு நிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைகளை ஒரு பகுதியாக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் விழாக்களில் நிகழ்ச்சித் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற அரசாணை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்திடும் நிறுவன விழாக்கள், பண்பாட்டு கலை விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்திட சம்பந்தப்பட்ட ஆணையரகம் தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் அனைத்து விழாக்கள், முக்கிய தினங்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்வி இயக்ககம், அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு ஆணை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT