tamilnadu health Secretary beela rajesh transfer tn govt order

Advertisment

தமிழக சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்த பீலா ராஜேஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பீலா ராஜேஷை வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமித்துள்ளது தமிழக அரசு.மேலும் ஜெ.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.2012- 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றி அனுபவம் உடையவர் ஜெ.ராதாகிருஷ்ணன். தற்போது ஜெ.ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீலா ராஜேஷ் மாற்றப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.