ADVERTISEMENT

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனப் பணியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

12:04 PM Sep 11, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனப் பணியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி மற்றும் முதலுதவிப் பெட்டி வழங்கப்பட்டது.

"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹியூமன் செட்டில்மெண்ட்ஸ்" (IIHS) நிறுவனத்தினால், திருச்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் "நகர் முழுவதும் உள்ளடக்கிய சுகாதாரம்" (City Wide Inclusive Sanitation) என்கிற திட்டத்தின் மூலம், செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் ரெட் கிராஸ் உடன் இணைந்து, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனப் பணியாளர்கள் மற்றும் நுண்ணுரம் செயலாக்க மையப் பணியாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் பயிற்றுனர் ராதாகிருஷ்ணன் புத்தாக்க பயிற்சி வழங்கினார். மேலும், தூய்மைப் பணியில் ஈடுபடும் போது ஏற்படக்கூடிய அபாயங்கள், ஆபத்துகளிலிருந்து உயிரைக் காக்க உதவும் முதலுதவிப் பொருட்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர்நல அலுவலர் ஷர்மிலி கலாமணி, ஐ.ஐ.எச்.எஸ். நிறுவன தலைமை வல்லுநர் சுகந்தா பிரிசில்லா, நிறுவன அணி தலைவர் நீலாதிரி சக்ரபோர்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT