Police arrest culprit

திருச்சி துவரங்குறிச்சி மேனிவயல் பிரிவு சாலையில் கடந்த வருடம் தம்பதியினர் சென்று கொண்டு இருந்தபோது மர்ம நபர் ஒருவர் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர்.

Advertisment

இந்நிலையில் தனிப்படை போலீசார் சிவகங்கையை சேர்ந்த சாருக்கான்(22) என்பவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவரிடம் இருந்த 5 பவுன் தங்கத்தை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment