ADVERTISEMENT

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

08:12 PM Jun 30, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சினிமா துறையில் பைனான்ஸ் கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாதா நடிகர் சசிகுமார் உறவினர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும், பைனான்சியர்கள் கெடுபிடி செய்து வருவதாகவும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் அந்த நேரத்தில் ஞானவேல்ராஜா வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பைனான்சியர்கள் கெடுபிடியாக நடந்து கொள்கிறார்கள் என்று கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இதனால் ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீதும் பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஞானவேல் ராஜா சார்பில் கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு எதிரான வழக்கில் எந்த வித ஆதாரங்கள் இல்லை எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இன்று (30/06/2021) உத்தரவிட்டார். அதில் ஞானவேல் ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனவே அவதூறு வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT