ADVERTISEMENT

உர விலை உயர்வு: மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழக விவசாயிகள் சங்கம்!

10:16 PM Apr 19, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் உரங்கள் ஒவ்வொன்றிலும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கந்தகச் சத்து உள்ளது. உழைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு உர நிறுவனங்களுக்கும் மத்திய அரசானது மானியம் வழங்கி வருகிறது. உரம் தயாரிப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை உயரும் போது உரம் தயாரிக்கக் கூடிய நிறுவனங்கள் தானாகவே விலையை ஒவ்வொரு வருடமும் உயர்த்திக் கொண்டே வருகின்றன. 50 கிலோ மூட்டை அடங்கிய உரம் 1,400 ரூபாயில் இருந்து இன்று ரூபாய் 1,950 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் விவசாயிகள் உரத்தை வாங்கி பயிர் செய்யும் நிலைமை கேள்விக்குறி ஆகிவிடும். எனவே மத்திய அரசானது ஒவ்வொரு சத்தான உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் முறையான மானியத்தை வழங்க வேண்டும். உர விலை உயர்வை அரசு நிர்ணயிக்க வேண்டும். விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் சங்கம் இன்று (19/04/2021) திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இந்த மனு அளிப்பின் போது விவசாயிகள் இஃப்கோ உள்ளிட்ட உர நிறுவனங்களின் உர சாக்கை மேலாடையாக அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT