Votes for 9 constituencies will be counted in 241 rounds

Advertisment

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஆறாம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகின்ற மே 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கையானது 241 சுற்றுகளாக எண்ணி முடிக்கப்படும் என்று திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். அதில் மணப்பாறை 30, ஸ்ரீரங்கம் 32,திருச்சி மேற்கு 28,திருச்சி கிழக்கு 27, திருவெறும்பூர் 30, லால்குடி 22, மண்ணச்சநல்லூர் 25, முசிறி 24,துறையூர் 23 என241 சுற்றுகளாக 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட உள்ளது.