trichy ration rice incident action taken by collector 

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் தீவிர நடவடிக்கையின் படிஅத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களைத்தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று கண்காணித்த போது, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி புலிவலம் அருகே உள்ள சிறுகுடி கிராமத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட 10 வெள்ளைநிற சாக்கு மூட்டைகளில் சுமார் 500 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசியும், 305 மூட்டைகளில் ரேஷன் அரிசியை உடைத்து குருணையாக வைத்திருந்த சுமார் 50 கிலோ எடை கொண்ட 15,000 கிலோ குருணை அரிசியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி திருச்சி தென்னூரில் சுமார் 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து நான்கு வாகனங்களையும் கைப்பற்றி 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்விரண்டு வழக்கிலும்தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷாவை தேடிக் கண்டுபிடிக்க திருச்சி ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை பல இடங்களில் தேடி கடந்த 13ஆம் தேதி கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

பாபு என்கிற சாதிக் பாட்சாமேல்திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்உத்தரவின் படி நேற்றுகுண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மத்திய சிறையில் உள்ள அவருக்கு இதற்கானஉத்தரவு வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற ரேஷன் அரிசி கடத்தல் தொழில்செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் தெரிவித்துள்ளார்.