ADVERTISEMENT

“மோடி அரசே! எடப்பாடி அரசே.! விவசாயிகளின் கோவணத்தை பறிக்காதே..!” விவசாயிகள் போராட்டம்

09:06 AM Sep 26, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகளும் எதிர்கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் பட்டை நாமம் போட்ட மண் சட்டியோடு அரை நிர்வாண கோலத்தில் ஏர் கலப்பையை தூக்கிக்கொண்டு் ஊர்வலமாக வந்து சாலை மறியல் செய்தனர் விவசாயிகள்.

இந்தப் போராட்டத்தின்போது விவசாயகளின் கோவணத்தை பறிக்காதே! என்று முழக்கமிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டார விவசாயிகள் நலசங்கம் சார்பில் மத்திய அரசின் விவசாயகளுக்கு எதிரான சட்டத்தை திருப்பப்பெறக் கோரி ஒன்றியச் செயலாளர் சின்னத்துரை தலைமையில் ஊரணிபுரம் கடை வீதியில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்துக்கொண்ட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மண் சட்டியில் பட்டை நாமத்துடன் அரை நிர்வாண கோலத்திலும் ஏர் கலப்பையை சுமந்தும் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் வேளாண சட்டத்தை திரும்பப்பெறக் கோரியும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் “மோடி அரசே! எடப்பாடி அரசே! பறிக்காதே! பறிக்காதே.! விவசாயகளின் உரிமையை பறிக்காதே..! பறிக்காதே பறிக்காதே விவசாயாகளின் கோவணத்தை பறக்காதே!” என்றும் முழக்கங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு பின் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT