digvijay

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர்பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸார்விவசாயிகள் மீது தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகைக்குண்டுகளையும் வீசினர்.

Advertisment

இந்நிலையில் வன்முறையைத் தொடங்கியவர்களிடம், அரசு அடையாள அட்டை இருந்ததாககாங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவர் திக்விஜய் சிங்குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர், "காசிப்பூர் எல்லையில், ட்ராக்டர் பேரணிக்குத் திட்டமிடப்பட்ட பாதையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். காவல்துறையினர் தடை விதித்தனர். மேலும் கண்ணீர்வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினர். இது வன்முறையைத் தூண்டியது.வன்முறையைத் தொடங்கிய 15 பேரை விவசாயிகள் நேற்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் அரசு அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பது இப்போது உங்களுக்குப் புரியும். இது ஒரு அமைதியான இயக்கத்தைக் கெடுப்பதற்கான ஒருங்கிணைந்த சதித்திட்டம்" எனக் கூறியுள்ளார்.