ADVERTISEMENT

சிவனே உன் தலை விருட்சத்தை அழிக்க துடிக்கும் மோடியிடமிருந்து காப்பாத்து; சிதம்பரம் நடராஜர் கோயிலில் விவசாயிகள் வேண்டுதல்

04:25 PM May 18, 2019 | tarivazhagan

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டெல்டா நீர் ஆதார அமைப்பின் தலைவர் கிள்ளைரவீந்திரன் கலந்துகொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர்கள் கற்பனைச்செல்வம், பிரகாஷ். கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் காங்மாங்குடிவெங்கடேசன், அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவசரவணன், சேத்தியாதோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஜயகுமார், தமிழக உழவர் முன்னணியை சார்ந்த நிர்வாகிகள் குபேரன், மதிவாணன், விவசாயிகள் கோபால், ராமலிங்கம், குஞ்சிதபாதம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் தீமைகள் குறித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது. இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் கட்சி, சாதி, மத பாகுபாடு இல்லாமல் ஒருங்கிணைந்து போராடுவது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவது குறித்து பொதுவான கூட்டமைப்பு பெயரில் புதிய பெயரை கொண்டு செயல்படுவது உள்ளிட்ட தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தலவிருட்சம் (தலமரம்) தில்லை மரம், இந்த மரம் தற்போது சிதம்பரம் கோயிலின் நந்தவனத்திலும் பிச்சாவரம் உப்பங்கழிகாட்டில் மட்டும் உள்ளது. தற்போது மோடியால் கொண்டுவரப்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பிச்சவாரம் காட்டு பகுதியில் கிணறு அமையவுள்ளதால் பிச்சவாரம் பகுதியிலுள்ள உப்பங்கழிகாடு (சதுப்புநிலக்காடு) அழிந்துவிடும். இதனால் 40 ஆண்டிற்கு மேலாகவுள்ள பிச்சாவரம் சுற்றுலாமையம், காடுகளிலுள்ள தில்லைமரம், சுரபுண்ணை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மருத்துவ குணம் கொண்ட மரங்கள் அழிந்துவிடும். எனவே விவசாயிகள் அனைவரும் கூட்டம் முடிந்து தில்லை மரத்தின் மரக்கிளைகளை தாம்பலதட்டில் வைத்துக்கொண்டு ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு வந்தனர். பின்னர் கோயிலின் கருவறை பகுதிக்கு சென்று அங்குள்ள தீட்சிதர்களிடம் தில்லை மரகிளைகளை கொடுத்து ஹைட்ரோகார்பன் திட்டத்தால் சிவனின் (நடராஜர்) தலவிருட்சத்தை அழிக்க துடிக்கும் மோடியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கொடுத்தனர். அவர்களும் மரகிளைகளை பெற்றுகொண்டு மோடி கொண்டுவந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பூஜை செய்தனர். மேலும் திட்டத்தை ரத்து செய்யவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT