cc

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலதலைவர் ஜான்சிராணி, நிர்வாகிகள் முருகபாண்டியன், ஜெயபாலன் ஆகியோர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா ஊரடங்கு நிவாரணம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சார் ஆட்சியர் விசுமகாஜனை சந்தித்து மனு அளித்தனர்.மனுவில் கரோனா வாழ்வாதார இழப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5000 வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்திஜூலை 7ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் சட்டப்படி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நான்கு மணி நேர வேலைக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும்.

Advertisment

நகர்ப்புற மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி வேலை வழங்க வேண்டும், மத்திய மாநில அரசுகளின் அனைத்து சமூக பாதுகாப்பு வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத கூடுதல் அளவு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடன் சிதம்பரம் சி.பி.எம். நகர செயலாளர் ராஜா, நகர்குழு உறுப்பினர் அமுதா உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.