Skip to main content

என்.எல்.சி நிறுவனத்தின் மண்வெட்டும் இயந்திரத்தைச் சிறைபிடித்த விவசாயி!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

The farmer who captured the NLC's mower!


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் மண் குவியல்களை கொம்பாடிக்குப்பம், பொன்னாலகரம், கொளப்பாக்கம், ஊத்தங்கால் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதும் மலைமேடாகக் குவித்து வைத்துள்ளனர். அவ்வாறு குவித்து வைத்துள்ள மணல்மேட்டில், மழைக் காலங்களில் ஏற்படும் மண் சரிவால், சுற்றுவட்டாரத்தில் உள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்களில் மணல் திட்டுகள் படிகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்துவந்தனர். 


இந்நிலையில், என்.எல்.சி நிர்வாகம் மண் மேட்டில் இருந்து மழைநீர் வருவதை தடுக்கும் விதமாக, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மேற்கொண்டுவந்தது. அப்போது, என்.எல்.சி நிர்வாகம் பெண்ணாலகரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்குச் சொந்தமான விவசாய விளை நிலத்தில் மண்வெட்டும் பணியை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், மழைக் காலங்களில் வடிகால் வாய்க்கால் இருந்து வரக்கூடிய தண்ணீரானது, தனது விவசாய நிலத்தில் செல்வதற்கு என்.எல்.சி நிர்வாகம் வழிவகுப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் மண் வெட்டும் பணியில் ஈடுபட்ட இரண்டு இயந்திரங்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்ய முடியாமல் தங்களின் வாழ்வாதாரத்தை அழித்துவரும் என்.எல்.சி நிர்வாகம் எவ்வித இழப்பீடும் தரவில்லை என்றும், தற்போது என்.எல்.சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள வடிகால் வாய்க்கால் பணியால் தங்களின் நிலம் முற்றிலுமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நிலை ஏற்பட்டால் தனது குடும்பத்துடன் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தகவல் அறிந்துவந்த என்.எல்.சி நிறுவன அதிகாரிகள் சம்பந்தபட்ட நபரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன்பேரில் கலைந்து சென்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2000 கோடிக்கு என்.எல்.சி. நிறுவனப் பங்குகளை விற்க மத்திய அரசு ஆலோசனை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Central government advises to sell shares of NLC company for Rs.2000 crore

இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது. 

இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது. 

தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.