ADVERTISEMENT

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மாவட்டத்திலேயே தொழிலாளர்களை ஏமாற்றும் தொழிற்சாலை

05:02 PM Sep 05, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சின்ன கொமேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது டாவ் காலணி நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஆண்கள் - பெண்கள் என சுமார் 1500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊக்க சம்பளம் அதாவது போனஸ் வழங்குவது உண்டு. கடந்த சில ஆண்டுகளாக ஊக்க சம்பளம் வழங்காமல் உள்ளனர். இதுப்பற்றி நிர்வாகத்திடம் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் கேட்டபோதும் சரியாக பதில் சொல்லவில்லையாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பேனஸ் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளது நிர்வாகம். இதனை கண்டித்து செப்டம்பர் 5ந்தேதி காலை வேலைக்கு வந்த தொழிலாளர்ள் வேலையை புறக்கணித்துவிட்டு பணியிடத்துக்கு செல்லாமல் தொழிற்சாலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுப்பற்றிய தகவல் அறிந்த தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், நிறுவனத்திடம் உடனடியாக தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என சொன்னதாக தெரிகிறது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் இதே வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவரது மாவட்டத்திலேயே தொழிலாளர்களை நிர்வாகம் ஏமாற்றுகிறது. அங்கேயே நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகத்துக்கு சாதமாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என குற்றம்சாட்டுகின்றனர் தொழிலாளர் தரப்பை சேர்ந்தவர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT