வேலூர் மாவட்டம் ஆம்பூர் காதர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அத்னான். இவர் ஏ-கஸ்பா காமராஜர் நகர் பகுதியில் அரசு அனுமதியின்றி குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடுத்துவதாக நகராட்சி உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Non-standard drinking water treatment plant in Ambur! Officers action!

அந்த தகவலின் பேரில் நகராட்சி உணவுப் பாதுகாப்பு அதிகாரி ஆரோக்கிய பிரபு தலைமையிலான அதிகாரிகள் குழு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. அங்கு குடிநீர் கேன் மற்றும் பாட்டில்களில் தரமற்ற குடிநீர் நிரப்பி வினியோகம் செய்ய இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் குடிநீர் ஆலைக்கு சீல் வைத்தனர்.

Advertisment

Non-standard drinking water treatment plant in Ambur! Officers action!

Advertisment

Non-standard drinking water treatment plant in Ambur! Officers action!

குடிநீர் தட்டுப்பாடு இருப்பதால் மாவட்டத்தில் பலரும் அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் எடுப்பதோடு, அரசின் அனுமதி பெறாமல் கேன்களில் பலரும் அடைத்து விற்பனை செய்கின்றனர். அதிகாரிகளும் புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்பேன் எனவுள்ளனர் என குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.