ADVERTISEMENT

65 பள்ளிக் குழந்தைகளுக்கு கண் பாதிப்பு- ஏர்வாடி பள்ளி விழாவில் பதட்டம்

07:12 PM Mar 17, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

நெல்லை மாவட்டத்தில் ஏர்வாடி நகரில் உள்ளது எஸ்.வி.ஹிந்து ஆரம்பப் பள்ளி அரசு நிதி மற்றும் உதவிகள் பெறும் இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ளதில் சுமார் 100 குழந்தைகள் பயில்கின்றனர் தனியார் பள்ளியான இந்தப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன் நிர்வாகத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று (மார்ச்16) ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளியின் இரு வகுப்பறைகளை ஒன்றாக்கி ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தனியார் மைக்செட் உரிமையாளரான ரமேஷ் என்பவர் மைக் மற்றும் லைட் செட் அமைத்தவர் வகுப்பறைக்குள்ளேயே ஹை வோல்ட்டேஜில் வெள்ளை நிறம் கொண்ட ஹைமாஸ்ஃபோகஸ் லைட்டை வகுப்பறையில் அமைத்தவர் அதை சிறுவயது மாணவ மாணவியரை நோக்கி அமைத்து விட்டார்.

மதியம் இரண்டரை மணி வாக்கில் ஆண்டுவிழா தொடங்கியதும் ஹைமாஸ்ஃபோகஸ் லைடடின் அதிக சக்தி வெளிச்சம் மாணவக் குழந்தைகளை நோக்கிப் பாய்ந்த சிறிது நேரத்தில்; அவர்களுக்குக் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. கண்களைக் கசக்கியவாறு அந்தக் குழந்தைகள் அழுவதைக் கண்ட ஆசிரியர்கள் ஃபோகஸ் லைட்டை ஆஃப் செய்து விட்டு விழாவை நிறுத்தி விட்டு பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.

இன்று காலை அந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்கு கண் சிவந்து கண்ணிலிருந்து நீர் வடிவதைக் கண்டு பதறிய பெற்றோர்கள் பள்ளி தாளாளரிடம் தெரிவிக்க அவரோ பிள்ளைகளை நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வந்திருக்கிறார். இந்தப் பாதிப்பு ஏற்பட்ட சுமார் 65 பிள்ளைகள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு இங்கு சோதனை செய்யப்பட்டதில் வெளிச்ச கூச்சத்தினால் ஏற்பட்ட எரிச்சல். பாதிப்பு இல்லை என்ற மருத்துவர்கள் அவர்களுக்கு கண் சொட்டு மருந்து போட்டு இரண்டே நாளில் சரியாகிவிடும் என்று தெரிவித்து அனுப்பிவைத்தனர். மருந்து போடா விட்டாலும் கூட இந்த எரிச்சல் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று டாக்டர்கள்; தெரிவிப்பதாக தெரிவித்த காவல்துறையினர் மைக்செட் உரிமையாளர் ரமேஷ் தப்பி ஒடிவிட்டார் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைத் தேடி வருகிறோம் என்கிறாhகள்.

குழந்தைகளுக்கு கண்பாதிப்பு இல்லை சக்தி வாய்ந்த விளக்கு பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு புறநோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்கிறார் மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரி.

- ராம்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT