/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hindu4334.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் டிசம்பர் 19- ஆம் தேதி அன்று ஆருத்ரா தேர்த் திருவிழாவும், டிசம்பர் 20-ஆம் தேதி அன்று தரிசன விழா நடைபெறும் என கோவில் தீட்சிதர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கரோனா, ஒமிக்ரான் நோய் தொற்று காரணமாக அரசின் உத்தரவுப்படி பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் விதமாக தேர் மற்றும் தரிசன விழா விற்கு பக்களுக்கு ஒரே கூட்டமாகக் கூடுவதற்கு அனுமதி இல்லை. தேர் மற்றும் தரிசன விழாவை கோவிலுக்கு உள்ளே நடத்திக் கொள்ள சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாளை (19/12/2021) தேர்த் திருவிழாவுக்கு அனுமதி அளிக்கக் கோரி கீழ வீதியில் கோவிலின் வாயிலில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் தேர் திருவிழா நடத்தவும், தரிசன விழாவுக்கு பக்தர்களைக் கூட்டமாக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கீழ வீதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கும் வகையில், சிதம்பரம் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜ், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உதவி ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)