ADVERTISEMENT

இன்னும் 2 முறை மோடி தமிழகம் வந்தால் கருத்துக்கணிப்புகள் மாறும்-எச்.ராஜா

06:29 PM Apr 06, 2019 | bagathsingh

சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் கிராமங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிலட்டூர் கிராமத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது.. அதிமுக -பாஜக கூட்டணிதான் வாக்கு உள்ள கூட்டணி. 40 சீட்டு திமுக ஜெயிக்கும் என்றிருந்தநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்ப 7, 8 சீட்டு தான் ஜெயிக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கு. இன்னும் 2 முறை பிரதமர் மோடி தமிழம் வந்தார் என்றால் மாறும். அதேபோல முதல்வர் எடப்பாடியும் தமிழகம் முழுவதும் சுற்றி வருவதால 40 தொகுதியும் எங்கள் கூட்டணி தான் ஜெயிக்கும்.

அதில் சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் 7 முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அமைச்சராக இருந்தும் தொழில் வளர்ச்சி இல்லை. ஆனால் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிக்கி இருக்கிறார். அதற்காக குடும்பமே கைது செய்யப்படும் நிலையில் பாட்டியால நீதிமன்றத்தில் கைது செய்து விடவேண்டாம் என்று 18 முறையாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர் மகனை இப்ப நிறுத்தி இருக்கிறார். இந்த தொகுதியில் நான் தான் வெற்றி பெறுவேன்.

கஜா புயலுக்கு பிறகு நெடுவாசலுக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தராமன் புயலால் தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு அந்தமானில் இருந்து ராணுவக் கப்பலில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து தூத்துக்குடியில் இறக்கி விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று சொன்னாரோ.. அந்த இடத்தில் நீங்களும் இருந்தீர்கள். இதுவரை எத்தனை தென்னங்கன்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு..

எல்லாத்துக்கும் கணக்கு சொல்லனும்னா டெய்லி எழுதி அனுப்பனும் உங்களுக்கு. எல்லாத்துக்கும் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கு. தேர்தல் முடிந்ததும் எல்லாம் நடக்கும் என்று நழுவிக் கொண்டு சென்றார்.

போகும் போது நீங்க எந்த டி.வி என்று கேள்வி கேட்டவரை பார்த்து கேட்ட எச்.ராஜா. தேர்தல் முடியட்டும் என்று சொல்லிச் சென்றது மிரட்டல் தொனியா என்ற வினா எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT