பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று காலை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் விரைவில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை அகற்றப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

Advertisment

kushboo

இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் குஷ்பு ’‘எச்சை’ ராஜாவின் கருத்துக்கள் அவரது சொந்தக் கருத்துக்கள் என்றால், பா.ஜ.க விற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால், மோடிக்கும் அமித்ஷாவிற்கு நான் சவால் விடுகிறேன். ராஜாவை உங்களால் கட்சியிலிருந்து நீக்கமுடியுமா? பெயருக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்யக்கூடாது. கட்சியை விட்டே நீக்கவேண்டும். உங்களால் முடியுமா?’ என்று கேட்டுள்ளார்.

Advertisment

kushboo tweet

தொடர்ந்து எழுந்த பலமான எதிர்ப்பின் காரணமாக அந்தஃபேஸ்புக்பதிவை எச்.ராஜா தற்போது நீக்கியுள்ளார்.