ADVERTISEMENT

பணம் பறிக்கும் பறக்கும் படையும்... களை இழந்த மாட்டுச் சந்தையும் ...

12:34 AM Mar 29, 2019 | jeevathangavel

ADVERTISEMENT

பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் பணம் பட்டுவாடா நடக்கிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT


ஈரோடு மாவட்டதில் இந்த பறக்கும் படையினர் வியாபாரிகளாகப் பார்த்து தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோட்டில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் புகழ் பெற்ற மாட்டுச் சந்தை ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெறுவது வழக்கம். இதற்காகவே வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகமாக வருவார்கள். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வியாபாரிகள் சந்தைக்கு வர பயப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஒரு வியாபாரி பத்து மாடுகளை வாங்கிச் செல்வார். ஆனால் தற்போது பணம் பறிக்கும் பறக்கும் படையால் பணம் கொண்டு வர முடியாமல் மிகவும் கவனமாக ஏதோ திருட்டுதனம் போல் சில ஆயிரங்கள் மட்டும் கொண்டு வருகிறார்கள். இதனால் இருக்கும் சொற்ப தொகைக்கு ஒன்றிரண்டு மாடுகள் மட்டுமே வாங்கி செல்கிறார்கள். இன்று கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினார்கள்.


இன்று வழக்கம் போல் மாட்டுச் சந்தை கூடியது. ஆனால் மாடுகள் வரத்து குறைவாக வந்திருந்தது. கேரளா கர்நாடகா தெலுங்கானா கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ரூ .5 லட்சத்திற்கு மாடுகளை வாங்கிச் செல்லும் அந்த வியாபாரிகள் ரூ. 40 ஆயிரத்துக்கும் மட்டும் மாடுகளை வாங்கிச் சென்றனர்.


பொதுவாக 90 முதல் 95 சதவீதம் மாடு விற்பனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று 20 சதவீதம் மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது.


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் அரசியல் கட்சிக்காரர்களை கவனிப்பதை விட்டு விட்டு மாட்டு வியாபாரியையும் மளிகை கடைக்காரனையுமே கண்கானிக்கறாங்க எல்லாம் சரிங்க ஐம்பதாயிரத்திற்கு மேலே இருந்தா உரிய ஆவனத்தை காட்டுனு சொல்றாங்களே மாடு என்ன விலைக்கு போகும்னு மாட்டுக்கா தெரியும் விலை பேசி விற்ற பிறகு தான் இன்ன விலை என்பது தெரியும் ஆவனம். ஆவனம் கறாங்க அப்படினா என்னனு விளக்குங்க சாமிகளா? என வியாபாரிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT