ADVERTISEMENT

சுதந்திர தினத்தில் கிராமமே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

08:50 PM Aug 15, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஒரு கிராம மக்கள் சுடுகாடு வசதி வேண்டி இன்று சுதந்திர தினத்தை புறக்கணித்து ஊர் முழுக்க வீடு தோறும் கருப்பு கொடி கட்டி வீதியில் பாடை கட்டி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ADVERTISEMENT

ஈரோடு சென்னிமலை, தென்முகம் வெள்ளோடு அருகே உள்ள பெரிய தொட்டிபாளையம் கிராம பகுதியில் 100க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சுடுகாடு வசதி கேட்டு பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வருவாய்துறையினரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை சுடுகாடு வசதி செய்து தரப்படவில்லை. எனவே சுடுகாட்டுக்காக இந்த பகுதி பொதுமக்கள் சுதந்திர தினத்தைப் புறக்கணித்து, பாடைகட்டியும், கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை உயர் அதிகாரிகள் விரைவில் சுடுகாடு வசதி தரப்படும் என எழுத்து மூலம் உறுதியளித்தனர். சுதந்திரம் பெற்று 73 ஆண்டு ஆகியும் இந்த டிஜிட்டல் இந்தியாவில் மக்கள் சுடுகாடு கேட்டு போராடி வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT