குற்றச்சம்பவங்களில் ஈடுபடும்கிரிமினல்நபர்களைத்தேடிபிடித்து கைது செய்யப்படும் நடவடிக்கை தமிழகம் முழுக்கபோலீசார்தீவிரப்படுத்தியுள்ளார்கள். ஈரோடு மாவட்டத்திலும்குற்றச்சம்பவங்களைத்தடுக்கும் வகையிலும், தலைமறைவாக இருக்கும்ரவுடிகளைபிடிக்கச்சென்ற இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும்போலீசார்இரவு முதல் விடியவிடியதேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். 24 ந் தேதி முன்தினம் முதல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் பலர் பிடிபட்டனர். இதேபோல் சந்தேகத்தின் பேரில் சிலர் பிடிபட்டனர். இந்தநிலையில் நேற்று இரவு 2 -வதுநாளாகவும்போலீசார்மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் விடியவிடியதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டபோலீஸ்சூப்பிரண்டுஅலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-"ஈரோடு மாவட்டத்தில்குற்றச்சம்பவங்களைத்தடுக்கவும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடும்நபர்களைக்கண்காணிக்கவும், தலைமறைவுகுற்றவாளிகளைக்கண்டுபிடிக்கவும் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை சரக காவல்துணைத்தலைவர் ஆகியோர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டபோலீஸ்சூப்பிரண்டுசசிமோகன்நேரடி பார்வையில் இரண்டு நாட்களாக இரவு தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி தேடுதல் வேட்டை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட அனைத்து காவல்அதிகாரிகளைக்கொண்டு மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பிடியாணைபிறப்பிக்கப்பட்டுத்தலைமறைவாக இருந்த 16ரவுடிகள்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் 65 பேர் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகக்கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 288 தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில்போலீசார்அதிரடி சோதனை மேற்கொண்டனர். தவிர மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட தீவிர வாகன சோதனையில் 2 நாட்கள் இரவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2352 வாகனங்கள் மீதுவழக்குப்பதியப்பட்டுள்ளது. இதுதவிர உரிய ஆவணங்களின்றி வந்த 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற அதிரடி சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்டபோலீஸ்சூப்பிரண்டுசசிமோகன்தெரிவித்துள்ளார்.