Erode Rowdies Guna and kalai passes away Shocking information in the police investigation

ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன். இவரது நண்பர் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரன். இருவரும் பிரபல ரவுடிகள். பல்வேறுகொலை வழக்கில் தொடர்புடைய கலை, குணா இருவரையும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில், மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலைசெய்துள்ளனர். மேலும், கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisment

இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர், கொலையாளிகளைத் தேடிவந்த நிலையில், இந்த கொலை கும்பலுக்கு தலைமை தாங்கிய காவலன் கார்த்தி உட்பட வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்தவேட்டையன் ரவி, அழகிரி மற்றும் மதன் உள்ளிட்ட 4 ரவுடிகளைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஈரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் மாமூல் வாங்குவதில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்தக்கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பிறகு சிறையில் அடைத்தனர்.