ADVERTISEMENT

அம்ரித் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

01:14 PM Jan 02, 2024 | ArunPrakash

அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில், அயோத்தியில் கடந்த 30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதில் ஒரு அமரித் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்க மாநிலம் மாவட்டத்தில் புறப்பட்டது .

ADVERTISEMENT

இது 5 மாநிலங்கள் இணைக்கும் முறையிலாகும் மேற்குவங்க மாநிலம் , ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் கடந்த 30ஆம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது . இதனுடைய பயண நேரம் 42 மணி நேரம் ஆகும்.

ADVERTISEMENT

இதில் எட்டு பெட்டிகள் உட்காரும் வசதி கொண்டதாகவும் 12 பெட்டிகள் படுக்கை வசதி கொண்டதாகவும் உள்ளது. இந்த ரயில் 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மால்டா இருந்து பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2247 கிலோ மீட்டர் பயணிக்கிறது.

இந்த அம்ரித் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்தது. இந்த ரயிலை தென்னக ரெயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ரயில்வே ஊழியர்கள் பலர் பூக்களை தூவி ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் நின்று சென்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT