வேலூர் மாநகரம், சின்ன அல்லபுரம் செல்லும் சாலையில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரியவந்தன. இதனால் அந்த சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, கரோனா பரிசோதனை நடத்தி முடிவுகள் வந்தபின்பே அடுத்தக்கட்ட பணிகளில் இந்த தெரு மக்கள் ஈடுப்படவேண்டும், ஏன் எனில் அவர் மூலம் யாருக்கு, எத்தனை பேருக்கு கரோனா பரவியுள்ளது என்பது தெரியாது. அது கண்டுபிடிக்கும் வரை பொதுமக்கள் ஒத்தொழைப்பு வழங்க வேண்டும், இல்லையேல் உங்களுக்கும் பாதிப்பு, உங்களால் பொதுமக்களுக்கும் பாதிப்பு என என சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் மக்களிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.

Advertisment

Road closure due to Corona spread .... Public struggle to get us out!

அங்கு குடியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது தேவையென்றால், மாவட்ட நிர்வாகத்தின் உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால் காய்கறி, மளிகை பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வரும் என சொல்லப்பட்டுள்ளது. கரோனா பாதித்த தெரு என்பதாலும், அந்த பகுதி மக்கள் தெருவை விட்டு வெளியேறாதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்புக்கு காவல்துறையினரை நிறுத்திவைத்துள்ளது.

Advertisment

இது எங்களுக்கு ஜெயில் போல் உள்ளது, நாங்கள் யாரும் வீட்டில் இருக்கமாட்டோம், பால்காரர்கூட எங்கள் தெருவுக்கு வர அனுமதிக்க மறுக்கிறீர்கள் இது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி, தங்கள் தெருவில் உள்ள தடுப்புகளை எடுக்கக்கோரி ஏப்ரல் 17ந்தேதி மதியம், அத்தெரு மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களும் பொதுமக்களுக்கு இடையிலான இடைவெளி விடாமல் இருந்தனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுடிப்படி காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தள்ளி நின்றே பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.