Published on 29/11/2023 | Edited on 29/11/2023

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி ஈரோட்டில் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்துள்ளார். ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற போது முன்பதிவு பெட்டியிலிருந்த பெண் பயணியிடம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாகரன் கட்டிடத் தொழிலாளி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கட்ட தொழிலாளியான கருணாகரனை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.