ADVERTISEMENT

சோழவரத்தில் 2 ரவுடிகள் என்கவுண்டர்

07:28 AM Oct 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அருகே ரவுடிகள் இருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில், காவலர்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பார்த்திபன் என்பவரின் கொலை வழக்கில் ரவுடி சரவணனை போலீசார் தேடிவந்த நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அதிமுக ஊராட்சி தலைவர் பார்த்திபன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியை போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து முத்து சரவணன் தலைமறைவாக இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள புதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பெயரில் முத்து சரவணனை பிடிக்க அப்பகுதிக்கு போலீசார் சென்றுள்ளனர். அவருடன் சண்டே சதீஷ் என்ற மற்றொரு ரவுடியும் இருந்துள்ளார். இருவர்களையும் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காலில் அடிபட்ட சண்டே சதீஷ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் ரவுடி முத்து சரவணன் உயிரிழந்தார். ரவுடி சதீஷ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்தார். முத்து சரவணன் உடலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவுடிகளைப் பிடிக்க முயன்றபோது தாக்குதல் நடத்தியதால் காவலர்களும் காயமடைந்தது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT