ADVERTISEMENT

கோவிலுக்கு சென்றவரை மிதித்துக் கொன்ற யானை...

12:19 PM Jan 30, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையை அடுத்த சிறுவாணி சாலை போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் யானை மிதித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். போளுவாம்பட்டி நரசிபுரம் பிரிவு பகுதியில் பூண்டி மத்தி பீட்டுக்கு உட்பட்ட நரசிபுரத்தில் இருந்து தாமனம்புதூர் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் உள்ள ஓடை அருகில் சுமார் 40 வயதுடைய அடையாளம் தெரியாத நபர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, நேற்று (29.01.2021) காலை 7.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள விஸ்வாமித்திரர் கோவில் பூசாரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வனத்துறை அலுவலர் ஆசிஃப் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். முதல் கட்ட விசாரணையில் போளுவாம்பட்டி காப்புக்காட்டு பகுதியில் பிணம் கிடந்தது தெரியவந்தது. மேலும் இறந்த நபர் இந்தச் சுற்றுவட்டாரப் பகுதியைச் சார்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்தது

இந்த நபர் அடிக்கடி சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விஸ்வாமித்திரர் கோவில் பகுதிக்கு அடிக்கடி வந்து செல்வார் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தக் கோவில் பூசாரி கணேஷ் என்பவரிடம் வனதுறையினர் விசாரணை செய்ததில், இறந்த நபர் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (45) என்பதும் இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இந்த நபர் கோயிலுக்கு அடிக்கடி வருபவர் என்றும், முழுவதும் சாராயம் குடித்து விட்டு இங்கு வந்து சுற்றிக்கொண்டிருப்பார் என்றும் பூசாரி தெரிவித்துள்ளார். நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் புதூர் கிராமத்தில் ஒரு ஒற்றை காட்டு யானை சுற்றிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இரவு ரோந்து பணி குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தக் காட்டு யானையை வேட்டைக்காரன் கோவில் வனப்பகுதிக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதற்கு முன்னதாக கார்த்திக், யானை தாக்கி இறந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக வனவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இறந்துபோன கார்த்திக் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT