rohit sharma about kerala elephant incident

கேரளாவில் யானை ஒன்று வெடி வைத்த பழத்தைச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

கேரளாவின் அமைதிபள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்றபோது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுப் படுகாயமடைந்து உயிரிழந்தது. யானையின் வாயில் அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பழம் வெடித்துள்ளது. இதனால், வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த யானைபற்களையும் இழந்துள்ளது.

Advertisment

இந்த வெடியினால் படுகாயமடைந்த அந்த யானை வலி தாங்கமுடியாமல் அங்குள்ள வெள்ளையாறு ஆற்றில் இறங்கியது.உயிர் பிரியும் வரை ஆற்றைவிட்டு அதுவெளியேறவே இல்லை. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, "நாமெல்லாம் காட்டுமிராண்டிகள். நாம் பாடம் கற்கவில்லையா? கேரளாவில் என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது. எந்த விலங்கையும் கொடுமைப்படுத்தும் உரிமை நமக்கு கிடையாது" என தெரிவித்துள்ளார்.