ADVERTISEMENT

தேன்கூட்டில் கைவைத்துவிட்டார் அமித்ஷா... குளவிகள் கொட்டத் தொடங்கிவிட்டன-வைகோ

10:49 AM Sep 16, 2019 | kalaimohan

ADVERTISEMENT

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ இன்று நேரில் ஆஜரானார்.

நக்கீரன் ஆசிரியர் கைதின்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டம் செய்ததாக வைகோ மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று நேரில் தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிய அவர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

தேன்கூட்டில் கைவைத்திருக்கிறார் அமித்ஷா குளவிகள் கொட்ட ஆரம்பித்துவிட்டன. இந்தியா என்ற உபகண்டம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்றால் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும். பட்டியலில் உள்ள 22 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும். தமிழ்நாட்டிலேயே பேனர் வைக்கக்கூடாது என அறிவித்து அதனை செயல்படுத்திய கட்சி மதிமுக என்றார்.

இந்த வழக்கில் வைகோ மீதான விசாரணையை அக் 10 ஆம் தேதி ஒத்திவைத்து எழும்பூர் 14வது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT