நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று காலையில் கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைக்கேள்விப்பட்டதும் நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் சென்றார் வைகோ. போலீசார் அவரை உள்ளே விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார் வைகோ.