ADVERTISEMENT

ஈழத்தமிழருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் - ஈரோட்டில் பரபரப்பு

05:27 PM Sep 08, 2018 | jeevathangavel

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் ஈழத்திலிருந்து அகதிகளாக புலம்பெயர்ந்து வந்தவர்களின் அகதிகள் முகாம். இங்கு தங்கியுள்ளார்கள் விஜயகுமார், கலாநி தம்பதியினர் . திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. விஜயகுமார் பெயின்டராக கூலி வேலை செய்கிறார். கர்பவதியாக இருந்த கலாநி சென்னிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்த போது இரட்டை குழந்தை இருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று இரவு கலாநிக்கு பிரசவ வலி ஏற்பட ஈரோடு தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்கள். இன்று பகல் முதல் ஒரு குழந்தை சுகபிரசவமாக பிறந்தது. பிறகு மருத்துவர்கள் சிசேரியன் மூலம் மேலும் மூன்று குழந்தைகளை பிறக்கவைத்தனர். இதில் இரண்டு பெண், இரண்டு ஆண். இந்த நான்கு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வந்த ஈழத் தமிழர் வறுமை நிலையில் கூலி வேலை செய்கிறார். ஒரு குழந்தையை வளர்த்து பராமரிக்கவே சிரமப்படும் ஏழை குடும்பம் நான்கு குழந்தைகளை வளர்ப்பதும் அவற்றை கவனிக்கவும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும் பொருளாதாரம் மிகவும் தேவை.


அரிதான இது போன்ற நிகழ்வுகளுக்கு அரசு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT