ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமிக்கு செலக்டிவ் அம்னீயா ஏற்பட்டுள்ளதோ? என சந்தேகம் எழுகிறது: சு.ஆ.பொன்னுசாமி

04:03 PM Nov 12, 2019 | rajavel

ADVERTISEMENT

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு செலக்டிவ் அம்னீசியா ஏற்பட்டுள்ளதோ.. ? என்கிற சந்தேகம் எழுகிறது என்று பால் முகவர்கள் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கமலஹாசன் ஏன் போட்டியிடவில்லை..? அவர் வயது முதிர்ந்த காரணத்தால் தான் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு அரசியலில் என்ன தெரியும்..? கடந்த பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு வாக்குகள் வாங்கி விட்டார்...? என "கேள்விகள் மேல் கேள்வி" கேட்டு, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு ஏற்பட்ட நிலை தான் அவருக்கும் ஏற்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஊடகங்கள் முன் எள்ளி நகையாடியுள்ள நிகழ்வு ஒரு முதல்வருக்கு அழகல்ல.


இன்று திரு. கமலஹாசன் அவர்களை நடிகர் என இறுமாப்போடு பேசும் தமிழக முதல்வர் அவர்கள் அங்கம் வகிக்கும் அதிமுகவை தொடங்கியதும் அதன் பிறகு அந்த கட்சியை வழி நடத்தியதும் ஒரு நடிகர், நடிகை தான் என்பதை அவர் மறந்து போனதை காண்கையில் எடப்பாடியார் அவர்களுக்கு செலக்டிவ் அம்னீயா ஏற்பட்டுள்ளதோ.. ? என்கிற சந்தேகம் எழுகிறது.

கட்சி ஆரம்பித்து சில ஆண்டிற்குள் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்டு பணமழை பொழிந்த அரசியல் திமிங்கலங்களுக்கு மத்தியில் முதல் தேர்தலிலேயே சுமார் 4% வாக்குகளை பெற்று திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சிப் பாதையில், மக்களின் நம்பிக்கையை கொண்டு வழி நடத்தும் கமலஹாசன் அவர்களின் வளர்ச்சி மீதான அச்சமே தற்போது தமிழக முதல்வர் அவர்களை இவ்வாறு பேச பேச வைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் வயது முதிர்வின் காரணமாகவே கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்துள்ளதாக கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காப்பற்றப்பட்ட அதிமுகவில் அங்கம் வகித்து கொண்டு, சசிகலா அவர்களிடம் அடிபணிந்து பெற்ற முதல்வர் பதவியை முதலில் ராஜினாமா செய்து விட்டு தனியாக கட்சி தொடங்கி அரசியல் களம் கண்டு அதில் வெற்றியும் பெற்று அதன் பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன், திரு. ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் குறித்து எள்ளி நகையாடட்டும். அதுவே சரியான ஜனநாயகமாக இருக்க முடியும். இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT