ADVERTISEMENT

“பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலா... நீங்க சொல்லித்தான் தெரியும்” - இ.பி.எஸ்.

02:52 PM Dec 02, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசு பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகள், தலைமைச் செயலகம், துறைமுகம் எனச் சென்னையின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் இருக்கும் இடத்தில் இந்த கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியமா. கார் பந்தயம் நடத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையில் மைதானம் இருக்கிறது; அங்கு நடத்தலாம். இந்த கார் பந்தயம் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது வெறும் விளம்பர அரசு. இந்த கார் பந்தயத்தால் ஏழை மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல் வந்ததாகக் கூறி அமலாக்கத்துறை அரசு மருத்துவரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததா இல்லையா என்பது குறித்து நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். எங்கே தவறு நடந்தாலும், அது தவறுதான். எனவே அதில் சட்டம் அதன் கடமையை செய்வதில் எந்த தவறுமில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ‘ஆளுநர் விவகாரத்தில் முதல்வரை அழைத்து பேசவேண்டும் என உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளதே’ எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், “அதுதான் உச்சநீதிமன்றமே தீர்ப்பு கொடுத்துவிட்டதே. பிறகு நாம் என்ன சொல்றது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT