ADVERTISEMENT

'ஜெ' பாணியல் வீட்டை முகாம் அலுவலகமாக மாற்றிய எடப்பாடி...

06:46 PM Aug 30, 2018 | jeevathangavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் வீட்டையும் கொடநாடு பங்களாவையும் முதல்வராக இருந்த போது முகாம் அலுவலகமாக வைத்து உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள் சந்திப்பு அரசு உத்தரவுகள் என அதிலிருந்தே அரசு நடவடிக்கைகள் இருந்ததாக அறிவிக்கப்படும் அதுபோல தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சேலம் வீட்டை முகாம் அலுவலகமாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் முதல்வர் பழனிச்சாமி தனது சேலம் வீட்டுக்கு பலமுறை வந்த போதும் இப்படியொரு அறிவிப்பு வந்ததில்லை.

தற்போது ஓ.பி.எஸ் அணி டார்ச்சரை தொடர்ந்து கடந்த 28ந் தேதி இரவே தனது சொந்த ஊரான சேலம் வந்தார் எடப்பாடி பழனிச்சாமி. பிறகு இங்கிருந்தே வெளியூர் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தார். அதேபோல் சுகாதாரத்துறை உட்பட பல சந்திப்புகள், அறிவிப்புகள் இங்கிருந்து வெளியாகியது. அதில்தான் எடப்பாடி பழனிச்சாமி தனது சேலம் வீட்டை முகாம் அலுவலகம் என குறிப்பிட வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2-ந் தேதி வரை சேலம் வீட்டில் ( முகாம் அலுவலகத்தில்) (?) இருக்க உள்ளாராம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT