ADVERTISEMENT

''விமான நிலையம் வேண்டாம்...'' போராடிய பள்ளி மாணவர்கள்!

10:02 PM Sep 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்கள் விமான நிலையம் வேண்டாம் என தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 13 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தங்களை எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதேபோல் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு பள்ளி ஒன்றும் அகற்றப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 'வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்' என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT