ADVERTISEMENT

''பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா?''- சட்டப்பேரவை வளாகத்தில் தமிமுன் அன்சாரி தர்ணா

01:01 PM Mar 11, 2020 | kalaimohan

ADVERTISEMENT

இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை வைத்தது.

என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்து விட்டதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். போராடி வரும் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அரசு வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பேசினார்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயகுமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என கூறினார்.

என்பிஆருக்கு எதிராக தீர்மானம் வேண்டும் என நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார். கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால் சட்டமன்ற வளாகத்திலேயே கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே நடக்கும் பாதிப்பல்ல. பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் நீங்கள் ஏன் கொண்டு வர மறுக்கிறீர்கள். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா ? என்ற கேள்விக்கு ஓபிஎஸ், என்பிஆரால் யாருக்கும் பாதிப்பில்லை என பதிலளித்தார். அது அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையினாலான பதில். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்களும் உள்ளனர். எனவே இதற்கு எதிராக தீர்மானம் வேண்டும் என இங்கேயே தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால் போலீசார் அனுமதி இல்லை என கைது செய்துள்ளனர் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT