The party flag was hoisted at the party headquarters. General Secretary M. Tamimun Ansari!

Advertisment

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, இன்று (28/02/2022) தமிழகமெங்கும் ம.ஜ.க. சார்பில் கொடி நாள் என அறிவிக்கப்பட்டு மாவட்டமெங்கும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், உணவு தானம் என ம.ஜ.க. சொந்தங்கள் இன்று முழுவதும் நிகழ்ச்சிகளை உற்சாகமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னையில் உள்ளம.ஜ.க. தலைமையகத்தில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கட்சிக் கொடியை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். இதில் பொருளாளர் ஹாரூண் ரஷீது , துணைப் பொதுச் செயலாளர் தைமியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

The party flag was hoisted at the party headquarters. General Secretary M. Tamimun Ansari!

Advertisment

மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைபுல்லாஹ் முழக்கங்களை எழுப்பினார். இளைஞர் அணி செயலாளர் அசாரூதீன், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மீனவர் அணிச் செயலாளர் பார்த்தீபன், M.J.V.S. மாநில துணைச் செயலாளர் சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். பிறகு தலைமையகத்திற்கு தொண்டர்கள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். தேனீர் விருந்தும் நடைபெற்றது.

இந்நிகழ்வில்மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாகான், மேற்கு மாவட்டச் செயலாளர் சாகுல், திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நாசர், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவகங்கை அபுதாஹீர், வட சென்னை மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ரெஜாக் உள்ளிட்ட நிர்வாகிகளும் , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட ம.ஜ.க. வினரும் பங்கேற்றனர்.