ADVERTISEMENT

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு - 7 பேருக்கு தூக்கு தண்டனை!

02:39 PM Aug 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கொலை நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் பதிவாகியிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி இன்று (04/08/2021) தீர்ப்பளித்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களளை நீதிபதி அல்லி அறிவித்துள்ளார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் அப்ரூவராக மாறியதால் அவருக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT