Skip to main content

“சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த காரணங்களும் இல்லை”- மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021
"There is no reason to repeal the rules of law" - High Court dismisses the petition

 

இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் உள்ள, கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் கீழ், கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு, நிர்வாகம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படாததால் இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில், புதிய விதிகள் வகுக்கும் வரை, கோவில்களில் கட்டுமானம், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சட்ட விதிகளை ரத்து செய்வதற்கான எந்த காரணங்களும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், சட்டத்தில் உள்ள தேவையற்ற விதிகளை நீக்கி, புதிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும், கோவில்களின் சொத்துக்கள் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், அதன் கட்டிடக்கலை மதிப்புகளை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்