ADVERTISEMENT

தபால் வாக்கு குறித்த திமுக வழக்கு... இன்று விசாரணை!

07:16 AM Mar 26, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று (25.03.2021) சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 70 குழுக்கள், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தபால் வாக்குகளை சேகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட 6,992 பேரிடமும், 308 மாற்றுத்திறனாளிகளிடமும் என மொத்தம் 7,300 பேரிடம் (சென்னையில் மட்டும்) தபால் வாக்குகள் பெறப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குழு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஒருநாளைக்கு 15 தபால் வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் வாக்குகள் தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் இதுவரை வழங்கவில்லை. தபால் வாக்கு பட்டியலை தராமலே தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது என அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றம் இதை இன்று விசாரிக்க இருக்கிறது.

தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்தோரின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதிக்குள் தர வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT