ADVERTISEMENT

உள்ளாட்சி தேர்தல் குழப்பத்திற்கு அதிமுகவே காரணம்- ஸ்டாலின் பேட்டி

01:05 PM Nov 29, 2019 | kalaimohan

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்,

மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காத நிலையில் யாரவது நீதிமன்றம் சென்று தடைபெற்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவிட மாட்டார்களா என்ற எண்ணத்தில்தான் அதிமுக அரசு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. தேர்தலை நிறுத்துவதற்கு எல்லா சதி திட்டங்களையும் செய்துவிட்டு ஏதோ திமுகதான் நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என்று திட்டமிட்டு முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பேசிவருகிறார்கள். ஆனால் எல்லா குழப்பத்திற்கும் காரணம் அதிமுகவே.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக இதில் பல குழப்பங்களை நிகழ்த்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறையை அரசு செய்யவில்லை. அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் வார்டுகளுக்கு மறுவரையறை செய்யவில்லை. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பட்டியல் இன, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீடுகளை அதிமுக அரசு செய்யவில்லை. மாவட்ட பஞ்சயத்திற்கான ஒதுக்கீடும் இன்னும் செய்யவில்லை. முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது என்றார்.

புதிய மாவட்டங்களில் உள்ள வார்டுகளை மறுவரையறையை முழுமையாக நிறைவு செய்தபிறகே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதை திமுக விரும்பவில்லை என்பது தற்போது உண்மையாகியுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT