ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று சில தினங்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு டிசம்பர் 6 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே வெளியடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

Advertisment

 local body election

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.