ADVERTISEMENT

முதியோர் உதவி தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்! திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ.விடம் குமுறிய முதியோர்கள்

10:08 AM Jan 10, 2019 | sakthivel.m

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், சிவகிரி பட்டி ஆகிய பகுதிகளில் கிழக்கு மாவட்ட செயலாளரும் தொகுதி எம்எல்ஏவுமான ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் திமுகவின் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.


இப்படி கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் மனுவாக எழுதி வந்து ஊராட்சி சபைக் கூட்டத்தில் உள்ள புகார் பெட்டியில் போட்டு விடுகிறார்கள். இப்படி மக்கள் போட்ட மனுக்களை ஒட்டுமொத்தமாக தொகுதி எம்எல்ஏவான ஐ. பி. செந்தில்குமார் எடுத்து அந்த மனுக்களை எல்லாம் தனி தனியாக பிரித்து, ஒவ்வொன்றாக படித்து பார்த்தபின் அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை, ‌கழிப்பறை வசதிகள் போன்றவற்றை எல்லாம் தனித்தனியாக பிரித்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

அதன்பின் முதியோர் உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களுடைய மனுக்களில் கையெழுத்து போட்டு அதை தாலுகா அலுவலகத்தில் கொடுங்கள் என்று சம்பந்தப்பட்ட முதியவர்களிடம் அந்த மனுக்களை கொடுத்து உங்களுக்கு கூடிய விரைவில் முதியோர் உதவி தொகை கிடைக்கும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதி கூறிவருகிறார்.


அப்பொழுது பாப்பம்பட்டியை சேர்ந்த முதியவர்கள் பலரும் ஐ‌.பி. செந்தில் குமாரைபார்த்து ‘ஐயா ஏற்கனவே எங்களுக்கு முதியோர் உதவித்தொகை வந்துகிட்டு இருந்ததையும் கடந்த சில வருடங்களாக நிறுத்திவிட்டனர். நீங்கதான் மீண்டும் எங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும். அதை நம்பித்தான் நாங்கள் வயிற்று கழிவு வந்தோம் அதையும் இந்த அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் முதியோர் உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கையெடுத்து கும்பிட்டனர்.

அதுபோல்அய்யம்பாளையம், சிவகிரிபட்டி பகுதிகளிலும் முதியோர் உதவி தொகைக்கான மனுக்களை பெரும்பாலான முதியவர்கள் திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தில் கொடுத்தனர்.
இந்த திமுகவின் ஊராட்சிகள் இக்கூட்டத்திற்கு அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களும். கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT