ADVERTISEMENT

தி.மு.க. எம்.பி. மீதான கொலை வழக்கு- வெளியானது எஃப்.ஐ.ஆர். விவரங்கள்!

07:11 PM Oct 13, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளியானது. அதில், கொல்லப்பட்ட கோவிந்தராசு ஏழு ஆண்டுகளாக கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றினார். கோவிந்தராசுவின் உடல் முழுவதும் காயங்களும் ரத்தக் கரையும் இருந்ததால் அவரது மகன் புகார் அளித்தார். கடந்த செப்டம்பர் 20- ஆம் தேதி அன்று அதிகாலை எம்.பி.ரமேஷின் உதவியாளர், கோவிந்தராசுவின் மகனுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், கடலூர் எம்.பி. டி.ஆர்.வி. ரமேஷ் மற்றும் அவரது தனி உதவியாளர் நடராஜன் கந்தவேல், அல்லா பிச்சை மற்றும் வினோத், முந்திரி ஆலையில் பணிபுரியும் ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் கோவிந்தராசுவை ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுக்கூடி அடித்துக் கொன்றுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பிரிவுகள் 302 (கொலைக்குற்றம்), 120 பி (சதி செய்தல்), 147, 149, 341, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிந்தராசுவின் உடலில் இடது கண்ணில் காயமும், மூக்கில் ரத்தம் வடிந்த சுவடும் இருந்தது. ஒருவாரமாக முந்திரி ஆலையில் தனக்கு பிரச்சனை என தெரிந்தவர்களிடம் கோவிந்தராசு கூறி வந்துள்ளார். அவரது உடலில் பூச்சி மருந்து கலந்ததற்கான தடயமும் இருந்தது. கோவிந்தராசுவின் ரத்தத்தில் எத்தில் ஆல்கஹால் அளவு 161 மி.கி. இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது சட்டை, வாய்ப்பகுதியில் பச்சை நிறத்தில் திரவம் காய்ந்த நிலையில் காணப்பட்டது. இவ்வாறு முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT