கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன்( 25) பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரும் இவரது நண்பர் சிவகுரு வயது 24 ஆகிய இருவரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக அருள் பாலன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சிவகுரு ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.