ADVERTISEMENT

வெற்றியை மாற்றி அறிவிப்பதாக திமுகவினர் புகார்...

08:23 PM Jan 04, 2020 | kalaimohan

பழைய தருமபுரி 8வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி, அதிமுக வேட்பாளரைவிட 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளர் என்கிறார்கள் திமுகவினர்.

அதேபோல 18 வது வார்டு தர்மபுரி காலணியில் திமுக வேட்பாளர் அருள் மொழி 111 வாக்கு வித்தியாசத்தில், அதிமுக வேட்பாளர் நரசேந்திரனை தோற்கடித்துள்ளார். அதனை தொடர்ந்து தர்மபுரி 14 வது ஊராட்சி அக்கமனஅள்ளி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட என்.ஏ மாதுவை வெற்றி என அறிவித்த நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக மாதையன் வெற்றி என அறிவித்துள்ளனர் என்றும் திமுகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இது போன்று பாலக்கோடு பகுதியுள்ள நான்கு பஞ்சாயத்து, காரியமங்கலத்தில் 3 பஞ்சாயத்து என ஒரே நேரத்தில் திமுக வேட்பாளர் வெற்றியை அதிமுகவிற்கு அறிவித்துள்ளதாகவும, இதனை தட்டிகேட்ட திமுக வேட்பாளர்கள் உள்பட அவர்களது ஆதரவாளர்களை அத்தனைப் பேரையும் காவல்துறை அடித்து விரட்டியதாகவும் திமுகவினர் தருமபுரி நாடாளுமன்ற எம்பி செந்தில்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில்குமார் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டுள்ளார். வேட்பாளரே தான் தோற்றுவிட்டேன் என்று தற்போதும் ஒத்துக்கொள்ளும் போது, நீங்கள் இப்படி செய்வது நியாயமா? தபால் வாக்குகளை எங்கள் வேட்பாளர் முன்பாக எண்ணாமல் இருப்பது என்ன நியாயம்? காவல்துறையை வைத்து அடித்து விரட்டி விட்டு பிறகு நீங்களே எண்ணி அறிவித்ததன் நோக்கம் என்ன? என்ற பல கேள்விகளை முன்வைத்தார்.


அதன் பிறகு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும், அவர்கள் விருப்பப்படியே அறிவிப்பை வெளியிட்டனர் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், தபால் வாக்குகளை அதிமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு சாதகமாக அறிவித்துவிடுமாறு மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு சர்குலர் சென்றதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்பதை தேர்தல் ஆணையம்தான் பொதுமக்களுக்கு உரிய விளக்கத்தையும், ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT