ADVERTISEMENT

'தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு'- தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

10:27 AM Jun 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ADVERTISEMENT

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வாக்காளர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்பு மனுவில் பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதாகவும், அதில் நிறைய குறைபாடுகள் உள்ளதாகவும், எனவே அவர் தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும், காலதாமதமாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளார். ராம்குமார் ஆதித்தனுக்காக, M/s.M.ஜோதிகுமார், A.மனோஜ்குமார் மற்றும் K.கனகேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரினர். அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதியரசர் D.கிருஷ்ணகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (17/06/2020) உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT