ADVERTISEMENT

4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

11:07 AM Mar 05, 2018 | rajavel


ADVERTISEMENT


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இன்று (05.03.2018). இந்த மாநாடு 6 மற்றும் 7-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டமும், மார்ச் 6-ந் தேதி அன்று மாவட்ட கலெக்டர்களுக்கான கூட்டமும், மார்ச் 7-ந் தேதி அன்று காவல் துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியிலுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளர் பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அதன் பின்னர் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டருக்கு விருது வழங்கப்படும். அதை முதல்-அமைச்சர் வழங்குவார். அதோடு, மாவட்டங்களுக்கான முக்கிய திட்டங்களும் அந்த மாநாட்டின் இறுதியில் அறிக்கையாக வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நிறைவுரை ஆற்றுவார்.

தமிழகத்தில் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 11, 12, 13-ந்தேதிகளில் இந்த மாநாடு அப்போது முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் தலைமையில் நடத்தப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் இந்த மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT